தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்
இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மற்றும் காரைக்காலில் இருந்து டிச.5ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 24 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சனிக்கிழமை கைது செய்தது.
அத்துடன் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இத்துடன் 2023 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை இதுவரை 33 படகுகளை பறிமுதல் செய்ததோடு 220 மீனவர்களையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...