திருப்பதி லட்டு பிரசாதத்தில் தரமும், சுவையும் குறைந்துவிட்டதா? தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டு வரும் லட்டு பிரசாதத்தின் தரமும், சுவையும் குறைந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. 

திருப்பதி என்றாலே நம் கவனத்துக்கு வருவது பெருமாளும், லட்டுவும் தான். உலகப் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவை மற்றும் அளவு முன்பைப் போன்று இல்லையெனவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் வைஷ்ணவ பிராமணர்கள் கலந்துகொண்டனர். அப்போது லட்டின் தரம், சுவையின், அளவு குறைந்து விட்டதாக பக்தர்கள் கூறும் புகார்கள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். 

இந்த குற்றச்சாட்டுக்கு லட்டு தயாரிப்பவர்கள், திருப்பதி லட்டுவின் சுவையும், தரமும் குறைய வாய்ப்பே இல்லை, தரமான முந்திரி மற்றும் திராட்சை கடலை மாவு கொண்டு பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வகுத்த திட்டத்தின் அளவின்படியே இன்று வரை திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் லட்டு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com