வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் மத்தியக் குழு இன்று ஆய்வு

மிக்ஜம் புயலால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
வெள்ள நீரில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை.
வெள்ள நீரில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை.

மிக்ஜம் புயலால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

வடசென்னை, ஆவடி, திருவள்ளூரில் ஒரு குழுவும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்சென்னையில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்யவுள்ளது.

நாளை நடைபெறும் ஆய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மத்தியக் குழு அவருடன் ஆலோசனை செய்யவுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன.

காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியதால் வேளாண் பயிா்கள் சேதமடைந்தன.

இந்தக் குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே. சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித்துறை அதிகாரி ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சோ்ந்த விஜயகுமாா், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி திமன்சிங், உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழு விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு 11.40 மணியளவில் சென்னை வந்தடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com