சென்னையை வெள்ளத்தில் இருந்து மீட்ட திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்

சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்து மீட்ட அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்து மீட்ட அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர் பி.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் இன்று காலை பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியது:

“மிக்ஜாம் புயல், கனமழை பேரிடரை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு பாராட்டியிருக்கிறது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக. கரோனா பேரிடர் சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் 'ஒன்றிணைவோம் வா' முன்னெடுப்பின் மூலம் மக்களைத் தேடி சென்று உணவு, உடை, இருப்பிட வசதிகளை செய்து தந்து உதவியது திமுக.

2015 பெருமழை சமயத்தில் அரசின் சார்பிலான நிவாரணப் பொருட்களிலும் 'ஸ்டிக்கர்' ஒட்டினார்கள் அதிமுகவினர்.

ஆனால், 2015 கனமழை வெள்ளத்தின் போதும், தற்போதைய கனமழையின் போதும் எவ்வித பாகுபாடுமின்றி மக்களுக்கான உதவிகளைச் செய்துள்ளது திமுக.

சென்னையை பெரும் வெள்ளத்திலிருந்து மீட்ட அரசு திராவிட மாடல் அரசு. 2015-ல் வெள்ளம் ஏற்பட்டபோது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரை திறந்துவிட அன்றைய முதல்வரிடம் அனுமதி பெறுவதற்கு அச்சம் இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. ஏரியிலிருந்து தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுடன் துணை நிற்கும்.

மகளிர் உரிமைத் தொகையை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கியது போல மழை வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாயை நிச்சயமாக அனைவருக்கும் வழங்குவோம்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com