* கோவளம் வடிநிலப்பகுதியில் 360 கி.மீ. நீளத்திற்கு. ரூ.1714 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், நங்கநல்லூர், கண்ணன் காலனி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், எம்சிஎன் நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். மீதமுள்ள பணிகள் நிறைவேற்றப்படும் போது, இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி உள்ளிட்ட சென்னையின் தென்பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது, சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைக்கப்படும் என்று நான் கருதுகிறேன்.