கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை: அருவியில் குளிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென் இலங்கை கடற்கரையையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடா்ந்து பெய்து வரும் கனமழையால், சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.அருவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதை அடுக்கு அவா்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். 

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: குடும்ப அட்டை இல்லாதவர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
 
பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கோதையாறு, பரளியாறு, குழித்துறை உள்ளிட்ட ஆற்றங்கறையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இரண்டு நாள்களுக்கு இடைவிடாத மழை பெய்யும். நெல்லை மாஞ்சோலை, கோதையார் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்தும் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்ட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com