கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 10:24 am

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென் இலங்கை கடற்கரையையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.  

அதன்படி 4 மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். குளங்கள் மற்றும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன. பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் பாதுகாப்பு கருதி தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் மாலை 4:00 மணிக்குள் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தாமிரவருணி கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.