டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் நிவாரணம்- அமைச்சர் உதயநிதி

டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி நிவாரணத் தொகை வழங்கும் பணியினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகில் பயனாளிகளுக்கு ரூ.6000 நிவாரணத் தொகையினை வழங்கி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நிவாரணத் தொகை டோக்கன் பெற முடியாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

டோக்கன் பெறாதவர்களுக்கு உதவ ரேஷன் கடை அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com