24 மணி நேர தொடர் மழை: ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல் வெளிக்குள் புகுந்த வெள்ளம்

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது. 
திருநெல்வேலி - தென்காசி சாலை வழியே அருகில் உள்ள வயல்வெளிக்குள் பாய்ந்தோடும் வெள்ள நீர்.
திருநெல்வேலி - தென்காசி சாலை வழியே அருகில் உள்ள வயல்வெளிக்குள் பாய்ந்தோடும் வெள்ள நீர்.
Published on
Updated on
1 min read

ஆலங்குளம்: ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது. 

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தின் முக்கிய நீராதாரமான தொட்டியான்குளத்திற்கு ஆலங்குளம் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், ஒரு வார காலத்திற்குள் குளம் நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்டது.  

இந்நிலையில், ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கிணறுகளில் நீர் மட்டம் கடகடவென உயர்ந்தது. தொட்டியான் குளத்தின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு நிரம்பியது. 

ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல்வெளிக்குள் புகுந்தோடும் வெள்ளம்.

இந்த நிலையில், குளத்தின் கரை, நான்கு வழிச் சாலைப் பணிக்காக பலவீனப் படுத்தப்பட்டதால், அது வலுவிழந்து திங்கள்கிழமை காலை உடைந்தது. இதனால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்ட நீர், வெள்ளமாக திருநெல்வேலி - தென்காசி சாலை வழியே அருகில் உள்ள வயல்வெளிக்குள் பாய்ந்தது. இதனால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தது. அருகில் வீடுகள் குறைந்த அளவே இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. 

வெள்ளம் காரணமாக திருநெல்வேலி - தென்காசி பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆறு மற்றும் குளங்களில் நீா்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.