உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

வெள்ள பாதிப்பால் 3 மாவட்டங்களில் தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

மழை வெள்ள பாதிப்பால் மூன்று மாவட்டங்களில் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:58 pm IST

மழை வெள்ள பாதிப்பால் மூன்று மாவட்டங்களில் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வெள்ளம் பாதித்துள்ள நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 19) நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மழை வெள்ள பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.