தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்!

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின.
தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்!

தொடர் கனமழை பெய்து வருவதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

வெள்ளத்தால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் நிலவுவதால், சென்னையிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - தேவர்குளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து சேவை அந்த மார்க்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாலையோரம் இருந்த சிலிண்டர் கிடங்கில் வெள்ளம் புகுந்ததால், சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. 

நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com