ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கனமழை: வந்தே பாரத் உள்பட 6 ரயில் சேவைகள் ரத்து!

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :18 டிசம்பர் 2023, 3:56 am

DIN

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதேபோன்று திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் இடையிலான ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளன. நிஜாமுதீன் ரயிலும் கனமழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை - நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.