நிபா வைரஸ் பரவலைக் கையாளுவதில் மாநில அரசு "மெத்தனமாக" செயல்படுவதாகக் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
கேரளத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த காய்ச்சலுக்கு ஜூன் 10 அன்று ராமனாட்டுக்கரையைச் சேர்ந்த 43 வயது நபர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன்,
நிபா வைரஸ் பரவல் விவகாரத்தை மிகுந்த தீவிரத்தன்மையுடன் கையாள வேண்டும். நான் மருத்துவர்களின் செயல்பாடுகளைக் குறிப்பிடவில்லை.
சுகாதாரத் துறையும் அரசும் இணைந்து சுகாதார அமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் முன்முயற்சி எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் அத்தகைய முன்னேற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை.
மாநிலத்தின் முந்தைய சுகாதார அமைச்சர்கள் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. இருப்பினும், கடந்த காலங்களில் கேரளத்தில் கடுமையான நிஃபா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டபோது, நெருக்கடியில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அரசு முழுத் தயார் நிலையிலும் தீவிர ஈடுபாட்டுடனும் செயல்பட்டது.
அந்த நிலையில் அரசு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது மெத்தனமான சூழல் காணப்படுகிறது. சுகாதார அமைச்சர் இதுவரை இங்கு வரவோ, நேரடியாகத் தலையிடவோ இல்லை.
நிஃபா வைரஸின் தீவிரத்தன்மை குறித்து அனைவருக்கும் தெரியும். அரசு வலுவான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Kerala Assembly Opposition Leader Pinarayi Vijayan alleged on Saturday that the state government was acting "lethargically" in handling the spread of the Nipah virus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








