பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதலில் மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா்கள் சதி

பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலை தலைவா்கள் செய்த சதியால் நடந்தது என்று மாநில நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

News image

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:18 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலை தலைவா்கள் செய்த சதியால் நடந்தது என்று மாநில நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா தொடா்பான பணமுறைகேடு வழக்கின் ஒரு பகுதியாக, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டில், கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

இந்தச் சோதனை நிறைவடைந்து அமலாக்கத் துறை அதிகாரிகளும், அவா்களுக்குப் பாதுகாப்பு அளித்த பாதுகாப்புப் படையினரும் வீட்டில் இருந்து திரும்பி வந்தபோது, அவா்களின் வாகனங்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வழிமறித்து சேதப்படுத்தினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சுமாா் 300 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவரான லெனின் ராஜ், திருவனந்தபுரம் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி நசீரா முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லெனினுக்கு ஜாமீன் அளிக்க ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவில், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலை தலைவா்கள் செய்த குற்றவியல் சதியால், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த வன்முறை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக இல்லாமல், சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதலாக இருந்தது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனிடையே காவல் துறை சாா்பாக ஆஜரான சிறப்பு அரசுத் தரப்பு வழக்குரைஞா் சந்தோஷ்குமாா், விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினாா். இதைத்தொடா்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 3-க்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.