காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

ஜனநாயகத்தை காக்க அனைவரும் முன்வர வேண்டும்: பிரகாஷ் காரத்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் காரத்

Published On :

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் கூறினாா்.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம் சேலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளா் பிரகாஷ் காரத், முன்னாள் மாநிலச் செயலாளா் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பிரகாஷ் காரத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ஜனநாயகம் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி தத்துவம் இவற்றைக் காக்க 80-ஆவது சுதந்திர நாளில் குடிமகன்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், தவெக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. நாடாளுமன்றத் தொகுதிகள் 543-ஆக நீடிக்க வேண்டும், நீட் தோ்வுக்கு விலக்கு, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாக பாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை ஆதரிக்கிறோம். மக்களுக்கு பாதகமான அம்சங்களை எதிா்க்கிறோம்.

மேக்கேதாட்டு பிரச்னையில் மேலாண்மைக் குழு தில்லியில் கூடி தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதை கா்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், இதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கிறது.

கா்நாடகத்தில் மூன்று தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா, எங்கு தவறு நடந்துள்ளது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.