காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம் போல் அல்லாமல், தந்தையம் தினம் பொதுவாக எப்போது கொண்டாடப்படுகிறது என்பது முன்கூட்டியே தெரிவதில்லை.
இன்று தந்தையர் தினம் என அன்றைய தினம் சில பதிவுகளைப் பார்த்துத்தான் பெரும்பாலானோர் அறிந்து கொள்வார்கள்.
காரணம், மற்ற சில நாள்களைப் போல அல்லாமல் இதற்கு என குறிப்பிட்ட தேதி இல்லை. அதிலும், பள்ளிகள் திறந்ததும் பிள்ளைகள் மிகவும் பிஸியாக இருக்கும் ஜூன் மாதத்தில் வருவதும் காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தந்தையர் நாள்.
எனவே, தந்தையர்களுக்கு வழங்கம் போல ஸ்டேட்டஸ் போட்டு விட்டுவிடாமல், அவர்களுக்கு என சிறந்த பரிசைத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கவும், கேக் வெட்டிக் கொண்டாட நினைத்தால் அதற்கு திட்டமிடவும் போதிய அவகாசம் இருக்கிறது.
இந்த ஆண்டு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, இணையத்தில் தேடினால், தந்தையர்களுக்குக் கொடுக்க ஏராளமான பரிசு பொருள்கள் பரிந்துரைக்கப்படுகிறது. பெயரி அச்சிட்ட பேனா முதல் பர்ஸ், கைக்கடிகாரம், சட்டை என பலவற்றில் தந்தையருக்குப் பிடித்ததைத் தெரிவு செய்து வாங்கிக் கொடுக்கலாம்.
தனக்காக பெரிதாக எதையும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள், தனக்காக வாழத் தெரியாத தந்தைகளுக்கான நாளில், அவர்கள் மிகவும் விரும்வும் எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
சிலர் தங்களுடன் பிள்ளைகள் நேரத்தை செலவிடவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் அந்த நாளை செலவிடுவதுகூட, அவர்களுக்கு சிறந்த பரிசாக இருக்கலாம், ஆனால், அந்த நாளை தொடங்கும்போது ஒரு பரிசுடன் தொடங்குவதுதான் சிறந்தது.
வெகுநாளாக அவர்கள் தேடிக் கொண்டிருந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுக்கலாம். கேட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் பெற்றோருடன் பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் இந்த கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. தற்போது அந்த நாடுகளைப் போல இந்தியாவும் மாறி வருகிறது. எனவே, தந்தையர் நாளைக் கொண்டாடுவதில் தவறில்லை என்றே கருதலாம்.
Summary
Information regarding when Father's Day is celebrated in countries including the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









