ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், 2 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்து வந்தவருமான விஜயதரணி இன்று தவெகவில் இணைந்தார்.

விஜயதரணி (கோப்புப்படம்)

Published On :

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், 2 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்து வந்தவருமான விஜயதரணி இன்று தவெகவில் இணைந்தார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியினர், தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து விலகி, தவெகவில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு, கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், தற்போது பாஜகவிலிருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

அதுபோல அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பி பாலகங்கா, முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்பி வனரோஜா ஆகியோரும் இன்று, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில், தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவைச் சேர்ந்த ஜான் மகேந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு. ரவி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமக்குடி முருகேசன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

Summary

Vijayadharani joins TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.