/

பாஜகவிலிருந்து, தவெகவுக்கு வந்தது ஏன்? மனம் திறந்தார் விஜயதரணி!

பாஜகவிலிருந்து விலகி தவெகவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து பேசினார் விஜயதரணி

News image

விஜயதரணி

Updated On :13 ஜூன் 2026, 1:46 pm IST

போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்கவும், பெண்களை பாதுகாக்க உறுதி தரும் காரணங்களால் தவெகவில் இணைந்திருப்பதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியான விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த நிலையில், அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அங்கு அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவி எதுவும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த விஜயதரணி, பாஜகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தார்.

பாஜகவிலிருந்து வெளியேறி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டது ஏன் என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பார் முதல்வர் ஜோசப் விஜய். இன்னும் 10, 15 ஆண்டுகளில் இந்தியாவை வழி நடத்தும் இடத்தில் விஜய் இருப்பார். போதைக் கலாசாரம் ஒழிக்க, பெண்களை பாதுகாக்க உறுதி தரும் காரணங்களால் தவெகவில் இணைந்துள்ளேன்.

ஒரு அரசியல் கட்சிக்கு வந்ததுபோல் இல்லை. குடும்பத்துக்கு வந்தது போல் உள்ளது என்றும் விஜயதரணி கூறியிருக்கிறார்.

Summary

Why did she move from the BJP to TVK? Vijayadharani opens up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.