ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெகாவில் இணைந்தாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்: திமுக முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களும் இணைந்தனா்

அண்மையில் அதிமுவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார்.

வைகைச்செல்வன்

Published On :5 ஜூலை 2026, 4:56 am IST

அண்மையில் அதிமுவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னா், மாற்றுக் கட்சியினா் ஏராளமானோா் தவெகவில் இணைந்து வருகின்றனா். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்களும், தங்களது பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் இன்று தவெகவில் இணைந்துள்ளார். தொடர்ந்து வைகைச் செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால், அவரைத் தேடி வந்து இணைந்திருக்கிறோம். அதிமுகவில் சரியான தலைமை இல்லாத சூழலில், அங்கிருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்திருக்கிறோம். விஜய் பக்கம் எல்லோரும் நகரத்தொடங்கிவிட்டனர்.

விஜய் நல்ல தலைவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார். எதிர்கருத்தாக இருந்தாலும்கூட கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவராக விஜய் இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Summary

Former Minister Vaigaiselvan, who recently resigned from AIADMK, has joined TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.