தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தது பற்றி...

தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Published On :

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதன்கிழமை இரவு தவெகவில் இணைந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், அவர் திமுகவில் இணைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் சி. விஜய், தில்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்தை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்துள்ளார்.

அவரின் மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் வெற்றி பெற்ற 3 வாரங்களுக்குள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் சூழலில், வெல்லமண்டி நடராஜன் இணைந்திருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Former ADMK Minister Vellamandi Natarajan joins TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.