அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தவெகவில் இணைந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்விக்குப் பிறகு அதிமுக நிா்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனா். முன்னதாக, தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனா்.
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு எழுந்து வந்த நிலையில், அவா்கள் இருவரும் இதை அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தனா்.
இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரான எஸ். வளா்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளா்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தனர்.
இவர்களுடன் புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Summary
Four former AIADMK ministers have joined TVK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர்! த.வெ.க.வில் சேருகிறார்?

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறேனா? எம்.ஆர். விஜயபாஸ்கர் பதில்!






