தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தவெகவில் இணைந்தது ஏன், வற்புறுத்தினார்களா? எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

தவெகவில் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளது பற்றி...

News image

தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் - Photo: YT | TVK

Updated On :13 ஜூலை 2026, 3:38 pm IST

தவெகவில் இணையச் சொல்லி யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக அரசில் குதிரை பேரம் நடப்பதாக ஆளுநரிடம் திமுக சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களுடன் பேசுகையில், த.வெ.க. வினர் அணுகியதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாகவும் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம் எனவும் கூறினார்.

இதையடுத்து தவெகவில் இணைந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, தவெக நிர்வாசிகள் தன்னை அணுகியதாக அவர் பேசியிருந்த நிலையில், தற்போது யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. விருப்பத்தின் அடிப்படையில்தான் தவெகவில் இணைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தவெக கட்சிக்கு வாருங்கள் என்று எங்களை யாரும் கூப்பிடவில்லை.

அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கொத்துக்கொத்தாக சென்று தவெகவில் சேர்ந்தார்கள். தவெகவில் சேரச் சொல்லி வற்புறுத்தியது கரூர் அதிமுக நிர்வாகிகள்தான். பின்னர் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து கருத்துகளைக் கேட்டு முடிவெடுத்தோம். பெரும்பாலானவர்கள் கருத்து அடிப்படையில் தவெகவில் இணைந்தோம். தவெகவில் இணையச் சொல்லி யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே அக்கட்சியில் இணைந்தேன். இது என்னுடைய சுயமுடிவு" என்று கூறினார்.

Summary

Former Minister M.R. Vijayabhaskar explanation about joining TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.