மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் டீசர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஓ சுகுமாரி படத்தின் டீசர் குறித்து...

A scene from the movie Oh Sukumari.

ஓ சுகுமாரி படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / ஆதித்யா மியூசிக் தமிழ்.

Published On :

பரத் தர்ஷன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடித்துள்ள ’ஓ சுகுமாரி’ என்ற படத்தின் தமிழ் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார். அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது பிறந்த நாளுக்கு இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக மஹேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ள இந்தப் படத்தில் திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, முரளிதர் கௌட், ஆமினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஓ சுகுமாரி எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் இவர் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Teaser of Aishwarya Rajesh's film 'Oh Sukumari'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.