/

3 மாதங்களுக்குப் பிறகு குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி!

சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி....

News image

குற்றாலம் பிரதான அருவியில் நீராடிய பொதுமக்கள் - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:09 pm IST

குற்றாலத்தில் பிரதான அருவியில் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 13) குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த ஓரிரு வாரங்களாகவே குற்றாலத்தில் சீசன், களைகட்டியுள்ளது. மெயின் அருவி எனும் பிரதான அருவியில் சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் அங்கு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து பணிகள் முடிந்ததையடுத்து நடப்பு சீசனில் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று குற்றாலம் பிரதான அருவியில் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். அதேபோல பழைய குற்றாலம், ஐந்தருவிகளிலும் இன்று தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் குளிக்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Courtallam main falls opened to bath for tourists

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.