எந்தவித கடமைகள், பொறுப்புகளும் இன்றி சுயவிருப்பத்தின்படி சுதந்திரமாக வாழ நினைக்கும் நவீன ஜென் ஸீ தலைமுறையினரிடையே 'டிங்க்' என்ற வார்த்தையும் வாழ்க்கை முறையும் தற்போது பிரபலமாகவே இருக்கிறது.
ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது திருமண வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஆனால், நவீன தலைமுறையினர் குறிப்பாக ஜென் ஸீ (1997–2012) இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை வித்தியாசமான முறையில் வாழத் தொடங்கியுள்ளனர். கடமை மற்றும் பொறுப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அவர்கள் சுதந்திரமாக வாழ நினைக்கின்றனர்.
அதனாலேயே அவர்கள் 'டிங்க்' (DINK) வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
'டிங்க்' என்பது என்ன?
டிங்க் என்பதன் விரிவாக்கம் இரட்டை வருமானம், குழந்தைகள் இல்லை (Dual Income, No Kids) என்பதாகும்.
கணவன் - மனைவி அல்லது ஒன்றாக லிவ் -இன் வாழ்க்கையில் வாழ்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருவரும் பணிக்குச் செல்வதைக் குறிப்பதாகும். அவர்கள் போதிய வருமானத்தை ஈட்டிய பிறகு விருப்பப்பட்டால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையைக் கொண்டிருப்பார்கள்.
ஜென் ஸீ தலைமுறையினரால் இந்த வாழ்க்கை முறை தற்போது பிரபலமாகியுள்ளது. மில்லினியல் (1981 - 1996) தலைமுறையினர் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை தங்களுக்காக செலவழிப்பது, தங்களுடைய விருப்பமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது, எந்தவிதக் கடமைகளும் பொறுப்புகளும் இன்றி சுதந்திரமாக வாழ்வது என இருக்கின்றனர். பொருளாதாரரீதியாகவும் எந்த பிரச்னையையும் அவர்கள் எதிர்கொள்வதில்லை என்பதால் நிதி சார்ந்த அழுத்தம் எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை.
குழந்தைப் பராமரிப்பு, அவர்களின் கல்வி மற்றும் இதர செலவுகள் இல்லாததால் தங்களுடைய விருப்பத்திற்கு செலவு செய்வதுடன் வருங்காலத்திற்கும் அவர்கள் முதலீடு செய்ய முடிகிறது என்று கூறுகிறார்கள்.
மேலும் திடீர் பயணம், திடீர் வேலை மாற்றம், எதிர்கால கனவுகளை / திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வது என வாழ்கின்றனர்.
பெண்கள் பலரும் திருமணத்திற்குப் பிறகு குறிப்பாக குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு பணியில் இடைவெளி ஏற்படுகிறது, பலரும் அதன்பின் வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ளாதபோது இந்த பிரச்னைகள் எதுவும் இல்லை என்று இந்த வாழ்க்கை முறையை விரும்பும் இளம் தலைமுறை பெண்கள் கூறுகிறார்கள்.
மிருணாள் தாக்குர் பேசியது....
நடிகை மிருணாள் தாக்குர் சமீபமாக குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளதையடுத்து இந்த 'டிங்க்' வாழ்க்கை முறை பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.
'டிங்க்' வாழ்க்கை முறை பற்றிய கேள்விக்கு மிருணாள் தாக்குர் பதிலளிக்கையில், 'நான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். என்னுடைய தோழிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் என்னுடைய குழந்தைகளும் வளரும்போது அது நினைவுகளாக இருக்கும். அதேநேரத்தில் ஒவ்வொருவருக்கும் விருப்பம் என ஒன்று உள்ளது. எனக்கு சரியான நேரம் வரும்போது நான் குழந்தைபெற்றுக்கொள்வேன்" என்று கூறியுள்ளார்.
கலவையான விமர்சனங்கள்...
இதையடுத்து டிங்க் வாழ்க்கை முறை பற்றி பலரும் சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
குழந்தை பெற்றுக்கொள்ளும்போது குடும்பச் செலவு அதிகமாகும், பணியில் அழுத்தம் ஏற்படும், வேலையில் கவனம் செலுத்த முடியாது, தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவோ, முன்னுரிமை அளிக்கவோ முடியாது என்று கூறுகிறார்கள் 'டிங்க்' விரும்பிகள்.
அதேநேரத்தில் சிலர் 'ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பது முக்கியம்' என்ற கோணத்திலும் பேசி வருகின்றனர்.
'ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் முழு உரிமை இருக்கிறது, தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று பொதுவாகவும் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது, வேலை உத்தரவாதம் இல்லாதது, விலைவாசி உயர்வால் செலவுகள் அதிகரிப்பது, பலரும் நகர வாழ்க்கையை வாழ்வது என்ற சூழலில் இந்த 'டிங்க்' வாழ்க்கை முறை, இளம் தலைமுறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Summary
Kids or no kids? What is DINK lifestyle which is trend in Gen Z?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
ஒசாகாவை வெளியேற்றினாா் சபலென்கா!
ஜென் ஸீ தலைமுறையினரிடையே இளையராஜா!
மெதுவா... மெதுவா..!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




