விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக்சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவை 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
மூன்று மணி நேரம், 46 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சின்னர் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
சாம்பியன் பட்டம் வென்ற சின்னருக்கு கோப்பையுடன், ரூ. 44.80 கோடியும் ஸ்வெரெவுக்கு ரூ. 22.40 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. விம்பிள்டன் சின்னர் வெல்லும் 5ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










