விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் 39 வயதான நோவக் ஜோகோவிச்சை 3-0 என்ற நேர் செட்களில் வீழ்த்திய 24 வயதான யானிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் யானிக் சின்னர் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.
7 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 39 வயதில் காலிறுதியில் நீண்ட நேரம் விளையாடி சாதனை படைத்தார். ஆனால், நடப்பு சாம்பியன் யானிக் சின்னரிடம் நேர் செட்களில் தோல்வியுற்று வெளியேறினார்.
இந்த அரையிறுதிப் போட்டி 2 மணி நேரங்கள், 20 நிமிஷங்கள் நடைபெற்றது. ஆனால், ஜோகோவிச் காலிறுதியில் 5 மணி நேரங்கள் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் யானிக் சின்னர், ஸ்வெரவ் உடன் நாளை (ஜூலை 12) மோதவிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் சின்னர் வென்றார் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்று சாதனை படைப்பார்.
முன்னதாக ஸ்வெரெவ் உடன் மோதிய 14 போட்டிகளில் சின்னர் 10 முறையும் ஸ்வெரெவ் 4 முறையும் வென்றுள்ளார்கள். அதில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் சின்னர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Always a pleasure to share the court with you @DjokerNole. Thanks for a great match today ð¤ð» Honoured and grateful to be back in the final here at @Wimbledon ðð See you all on Sunday ð±ð¦ pic.twitter.com/ptTgkvPtYT
— Jannik Sinner (@janniksin) July 10, 2026
Summary
Defending champion Sinner dominates 39-year-old Djokovic to set up Wimbledon final vs Zverev
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











