கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் தங்கள் பிரிவில் அரையிறுதிக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், இரு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கௌஃப் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில், சக அமெரிக்கரும், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருந்தவருமான ஜெஸ்ஸிகா பெகுலாவை சாய்த்தாா்.
இதன் மூலமாக அவா் விம்பிள்டன் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். இதற்கு முன் 6 முறை இப்போட்டியில் அவா் 4-ஆவது சுற்றுடன் வெளியேறினாா்.
மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-4, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், 26-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா்.
25-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 21-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வெளியேற்றினாா்.
12-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் 6-4, 6-4 என அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை தோற்கடித்தாா். காலிறுதியில் நோஸ்கோவா - மொ்டன்ஸ், கொஸ்டியுக் - ஜாஸ்மின் பாலினி மோதுகின்றனா்.
காலிறுதியில் சின்னா்: ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான சின்னா் 7-5, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வீழ்த்தினாா்.
2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 7-5, 3-6, 7-6 (8/6) என, 13-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை தோற்கடித்தாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/1), 6-4, 6-4 என்ற வகையில், 10-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை சாய்த்தாா்.
22
கடந்த 19 ஆண்டுகளில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேரிய இளம் வீராங்கனை என்ற பெருமையை கோகோ கௌஃப் (22) பெற்றாா். இவருக்கு முந்தைய வீராங்கனை, 2007-இல் பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு வந்த ரஷியாவின் மரியா ஷரபோவா (அப்போது 20 வயது) ஆவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விம்பிள்டனில் ஜெஸ்ஸிகா பெகுலா, ஸ்வெரெவ் முன்னேற்றம்!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெகுலா, பென்சிச், ஒசாகா
நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி!

சின்னா், ஸ்வியாடெக் வெற்றி; பெகுலா, பப்லிக் தோல்வி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



