காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 10 மணி வரை, 3 மணி நேரத்துக்கு தஞ்சை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை, 3 மணி நேரத்துக்கு தஞ்சை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், இன்று காலை 10 மணி வரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என்றும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதோடு, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com