மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

வெள்ள பாதிப்பையொட்டி தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் நாளை (டிச. 20) மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :19 டிசம்பர் 2023, 9:51 pm IST

வெள்ள பாதிப்பையொட்டி தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் நாளை (டிச. 20) மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை (டிச. 20) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாளை கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.

நெல்லை - தாதர் விரைவு ரயில் நாளை மதுரையிலிருந்து புறப்படும்.

மதுரை - புனலூர் இடையிலான ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) பெய்த தொடர் கனமழை காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

குறிப்பாக நெல்லை மாநகரம், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 

இதனால், மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.