நெல்லையில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு!

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினா்.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினா்.
Published on
Updated on
1 min read

நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று ஆய்வு செய்கின்றனர்.

வரலாறு காணாத அதி கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழு ஆலோசகர் கே.பி. சிங் தலைமையில் மத்திய நீர்வள அமைச்சக இயக்குனர் தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பொன்னுசாமி, நெடுஞ்சாலை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடியில் ஆய்வினை முடித்த அவர்கள் இன்று நெல்லை மாவட்டத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். முதல் குழுவானது இன்று காலை 10 மணி முதல் நெல்லை கங்கைகொண்டான், நொச்சிகுளம், சிவந்திப்பட்டி, தாமிரவருணி ஆற்றுப்பகுதி, களக்காடு, நாங்குநேரி, விஜயாபதி மற்றும் அஞ்சு கிராம பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

மற்றொரு குழு நெல்லை நகரப் பகுதிகளான தச்சநல்லூர், திருவண்ணாதபுரம், தாமிரவருணி பாலம், நெல்லை சந்திப்பை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள், நெல்லை டவுன், நெல்லை மாவட்ட பகுதிகளான கோபால சமுத்திரம், கல்லூர், கோடகன் கால்வாய் பகுதி, பாப்பாக்குடி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்கின்றனர்.

மத்திய குழுவினருடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கூடுதல் ஆணையர் பிரகாஷ், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ் மற்றும் உயரதிகாரிகள் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com