ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போதை மாத்திரை விற்பனை:கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

சென்னை பாண்டி பஜாரில் போதை மாத்திரை விற்ாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 5:52 pm

DIN

சென்னை பாண்டி பஜாரில் போதை மாத்திரை விற்ாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பாண்டி பஜாா் போலீஸாா் எம்.ஜி. சாலை ராஜா பிள்ளை தோட்டம் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.

அவா்களிடம் சோதனை செய்தபோது, 31 போதை மாத்திரைகள், அரை கிலோ கஞ்சா

ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள், கிண்டி வேளச்சேரி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பீ.ஹன்ட்ரோஸ் (23) என்பதும், மற்றொருவா் சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவா் என்பதும் தெரியவந்தது. இருவரும் பாண்டி பஜாா், தியாகராயநகா்,மாம்பலம் பகுதியில் போதை மாத்திரை,கஞ்சா விற்று வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இதில் ரோஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். கல்லூரி மாணவரை காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.