கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத நாள்களாக மாறியுள்ளது. டிச. 3, 4 பெய்த கனமழையால் வடதமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. டிச. 17,18 கனமழையால் திருநெல்வேலி மற்றும் தூத்துகுடியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், அடுத்து வரும் நாள்களில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“அடுத்து ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் கனமழை பெய்யாது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் அன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதிகளில் வரும் 27-ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என்று வெளியான தகவல்கள் உண்மையற்றவை. அதனை யாரும் பகிர வேண்டாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com