தென் மாவட்டங்களில் மீட்புப் பணி நிறைவு: தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா

மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது என்று தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது என்று தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். 

இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. 1,200 மெட்ரிக் டன் லாரிகளிலும் 81 டன் ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டன. தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 35 பேர் பலியாகினர். 3,500 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மத்திய, மாநில பேரிடர் குழுக்கள், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 
தென் மாவட்டங்களில் பால் விநோயம் சீராகி உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com