சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம்: அன்புமணி

சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை. இந்த வேலையை 5 ஆம் வகுப்பு மாணவன் செய்வான். 

வானிலை மையம் பெரும்பாலும் கூறுவது, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒரு சில மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும். இவ்வளவுதான்.

தொழில்நுட்பம் எவ்வளவு மாற்றமடைந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளது. வானிலை ஆய்வு மையம் தான் முன்னெச்சரிக்கை தர வேண்டும்.

குறிப்பிட்ட மாவட்டத்தில் எத்தனை செ.மீ பெய்யும் என்பதை வானிலை மையம் முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் முன்கூட்டியே எச்சரிக்கை விடப்படும். அதற்கு ஏற்றப்படி மக்களும் திட்டமிட்டு கொள்வார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com