தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரியார் நினைவு  நாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை 

பெரியாரின் 50ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :24 டிசம்பர் 2023, 6:40 am

DIN

பெரியாரின் 50ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப்படதிற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார். 
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!
“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.