மத்திய நிதி அமைச்சர் தகுந்த நிதியை தருவார்- அமைச்சர் உதயநிதி நம்பிக்கை

வெள்ள பாதிப்பை பார்த்துவிட்டு மத்திய நிதி அமைச்சர் தகுந்த நிதியை ஒதுக்குவார் என்று நம்புவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.  
மத்திய நிதி அமைச்சர் தகுந்த நிதியை தருவார்- அமைச்சர் உதயநிதி நம்பிக்கை
Published on
Updated on
1 min read

வெள்ள பாதிப்பை பார்த்துவிட்டு மத்திய நிதி அமைச்சர் தகுந்த நிதியை ஒதுக்குவார் என்று நம்புவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களில் முதல் கட்டமாக 11 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளோம். 

இதுதவிர கால்நடை, வீடுகளை இழந்தோர்களும் கணக்கெடுக்கப்பட்டு முதல்கட்ட நிவாரண தொகை அளிக்கப்பட்ள்ளது. விரைவில் அனைத்து நிவாரணமும் வழங்கபடும் என்றார். தொடர்ந்து தென் தமிழகத்துக்கு தேவையான உதவியை செய்யவில்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, அதை தான் செய்து வருகிறோம். கடந்த 10 நாளாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகிறோம். அவர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், 100 வருடத்துக்கு பிறகு பெரிய மழை பெய்துள்ளது.

கால்நடை இழந்தோர் சான்றிதழ் இருந்தாலே நிவாரணம் கொடுக்கப்படும். புதிய அணை கட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் சொல்வார்கள். மாஞ்சோலை மலைக்கிராமத்தில் சீரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் இது பேரிடர் இல்லை என்றார். இப்போது அவர் பாதிப்புகளை பார்க்க வருகிறார். கண்டிப்பாக அவர் பாதிப்பை பார்த்து விட்டு தகுந்த நிதி கொடுப்பார் என நம்புகிறோம். பிரதமர், நேற்று தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசி உள்ளார். எனவே போதிய நிதியை கொடுப்பார்கள் என நம்புகிறோம் என்று தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com