அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான உணவு பட்டியல்!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்துள்ள உணவு வகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான உணவு பட்டியல்!
Published on
Updated on
1 min read

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்துள்ள உணவு வகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணியளவில் .அதிமுகவின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர்களான எம்.ஜிஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட 23 தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

இந்த நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் தம்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, பால் கறி கூட்டு, வத்த குழம்பு, மோர் குழம்பு, அடை பிரதமன் பாயாசம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 20 வகை உணவுகளுடன் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உனவு பரிமாறப்படுகிறது.

பெரும்பாலும் பொதுக்குழு மற்றும் செய்ற்குழு கூட்டம் என்றால் அசைவ பிரியாணி பிரதான உணவாக பரிமாறப்படும். இன்று பெளர்ணமி என்பதால் சைவ விருந்து உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com