பள்ளிகளில் சாதிய பாகுபாடு இல்லை!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
பள்ளிகளில் சாதிய பாகுபாடு இல்லை!


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர் தொடக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 

''பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை இன்று முக்கியமான நாள். பள்ளி கல்வி துறையில் 2 ஆம் கட்டமாக  519 பள்ளிகளில் இன்று 1000 வகுப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

அடுத்தகட்டமாக 1200 வகுப்பறைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதையும் திறக்க இருக்கிறோம். 

ஒவ்வொரு கிராமப் புற மாணவர்களிடமும் கணினியை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தக வழி கல்வியை தாண்டி பல்வேறு திறமைககான பயிற்சி வழங்க இருக்கிறோம். 

தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னையிலும் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் வழங்க ஆன்லைன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை எழுத முடியாது; தள்ளி வைக்க வேண்டும்  என பெரிய அளவிற்கு கோரிக்கை வரவில்லை. எனினும், ஜனவரி 7 ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளி வைப்பது குறித்து, முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள் . அது தொடர்பாக ஆய்வு செய்வோம் . அது போன்ற தீண்டாமை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இல்லை'' எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com