கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை தொடங்கியது.
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

கோவை: கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை தொடங்கியது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- திருநெல்வேலி, சென்னை-மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில் நகரங்களான கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து தெற்கு ரயில்வே சாா்பில் கோவை-பெங்களூரு இடையே டிசம்பா் 30 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை, பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கிவைக்க உள்ளாா்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு காலை 11.30 மணியளவில் சென்றடைந்தது.

மீண்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 8 மணியளவில் வந்தடையும்.

இந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு சொகுசுப் பெட்டி, 7 சாதாரணப் பெட்டிகள் என மொத்தம் 8 பெட்டிகள் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com