
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்ய உள்ளது.
இறுதிச்சடங்கில் தமிழகரசு சார்பில் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் தேமுதிக கட்சிக் கொடி ஏந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர் தூவி கண்ணீருடன் விஜயகாந்த்தின் ஊடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.