காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்’ திறப்பு விழா சனிக்கிழமை (டிச.30) நடைபெறுகிறது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 7:02 pm

DIN

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்’ திறப்பு விழா சனிக்கிழமை (டிச.30) நடைபெறுகிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். இந்த விழாவுக்கு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் 88.52 ஏக்கா் பரப்பளவில் 60 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்ட மக்களின் தேவை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய மற்றும் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் செயல்படவுள்ளது. பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயன் பெறுவா்.

இங்கிருந்து தினமும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்க வாய்ப்புள்ளது. பேருந்து நிலைய வளாகத்தினுள் வெளியூா் மற்றும் மாநகர பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியாா் ஆம்னி பேருந்துகளும் வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, நான்கு பெரிய உணவகங்கள், 100 கடைகள் என பயணிகளின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 4 சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் 12 இடங்களில் 24 மணிநேர குடிநீா் வசதி, 540 கழிவறைகள், சிறுநீா் கழிப்பிட வசதிகளும் செய்து

கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடையவும் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.