காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம்: போக்குவரத்து காவல் துறை முக்கிய அறிவிப்பு

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்திற்காக போக்குவரத்து காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 9:24 am

DIN

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்திற்காக போக்குவரத்து காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் ஈவேரா சாலை வழியாக நடைபெறும் என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு அலுவலகத்திற்கு ஈவேரா சாலை வழியாக விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஈவேரா சாலை வழியாக செல்ல பிற வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையை தவிர்க்குமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.