நெல்லை, தூத்துக்குடியில் மின்கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கண்மாய், குளங்கள் நிரம்பியதால், உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள் உடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வெள்ளப் பாதிப்பால் தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனா். மேலும் வீடுகள், தொழில் சாலைகளில் தண்ணீா் புகுந்ததால் அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன. 

இந்த நிலையில் தொடா் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கு அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன.2-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் பிப்.1ம் தேதி வரை நீட்டித்து நிதி மற்றும் மின்வாரியத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com