நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை:  காவல் துறையினர் விசாரணை

நாமக்கல்லில் பெண் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
வைஷ்ணவி.
வைஷ்ணவி.

நாமக்கல்: நாமக்கல்லில் பெண் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), இவர் நாமக்கல் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி முதல் கணவர் விவாகரத்து ஆன நிலையில், ஈரோட்டில் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார்.

சேகர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண் காவலர் வைஷ்ணவி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் 22 ம் தேதி தான் நாமக்கல் ஆயுதப்படையில் பணிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் ஆஞ்சனேயர் கோயில் அருகே உள்ள தெருவில் வாடகை வீட்டில் வசதித்து வந்த நிலையில், வீட்டில் இருந்த வைஷ்ணவி வியாழக்கிழமை   களைக்கொல்லி மருத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பிறகு, தாமாகவே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் காவல் துறையினர் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் வைஷ்ணவிக்கு 4 வயதுடைய ஆண் குழந்தை உள்ளது  குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com