நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசியிருக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசியிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். 
நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசியிருக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி


உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள். மத்திய அமைச்சர் 
நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசியிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். 

அமைச்சர் சேகர்பாபு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து பிறகு ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்று புதுப்புது குற்றச்சாட்டை சிலர் சொல்கிறார்கள்.

நாட்டில் இருக்கிற மிகப்பெரிய பேருந்து நிலையத்தை கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திறந்து வைத்ததால் சிலருக்கு வயிற்றெரிச்சல். 

உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்.மத்திய அமைச்சர் 
நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசியிருக்கிறார்.

குற்றம் இல்லை என்பது தெரிந்தும் சிலர் குற்றம், குற்றம் என்று சொல்வார்கள்.அவர்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. 

ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் பெருமாள் சுற்றி வரக்கூடிய தெருவில் சுத்தம் செய்யும் பணியை அறநிலையத்துறை இரண்டு நாள்களிலேயே முடித்துவிட்டது.

கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்தால் பக்தர்கள் முதல்வரை அன்னதான பிரபு என அழைக்கின்றனர். கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை தரம் பரிசோதிக்க உணவு கட்டுப்பாட்டு ஆலோசனைக்குழு அறிவிக்கப்பட்டு சுழற்சி முறையில் ஆண்டிற்கு ஒவ்வொரு திருக்கோயிலிலும் நான்கு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புயலால் பாதிக்கப்பட்ட திருக்கோாயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com