ஏ.எம்.சிவபிரசாந்த்
ஏ.எம்.சிவபிரசாந்த்

அமமுக வேட்பாளர் விலகல்: ஓபிஎஸ்ஸை தொடர்ந்து டிடிவி தினகரனும் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடமாட்டார் என்று  அந்தக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடமாட்டார் என்று  அந்தக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட அமமுக சார்பில் சிவபிரசாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்தி டிடிவி தினகரன் கூறியதாவது:

பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்.

அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில்முருகன் வாபஸ் பெற்ற நிலையில், அமமுக வேட்பாளரும் போட்டியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்