
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்திக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் விரைவில் வெளிப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18இல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திக்கு இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.