அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாமுக்கு சிலை: அமைச்சர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 
மு.பெ. சாமிநாதன்
மு.பெ. சாமிநாதன்
Published on
Updated on
1 min read


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், 

ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் ஊர்தியை ஏற்படுத்தி அதில் மருத்துவர், இரண்டு செவிலியர்கள், பல்வேறு கருவிகள் உள்ளடக்கிய வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் வேன் கிராமங்களில் திட்டமிட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்து ஒவ்வொரு பகுதியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, அங்கே நேரில் சென்று பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது

மேற்கு மண்டலத்திலேயே ஒரு சிறப்பான மருத்துவனை துவங்குவதற்கான பணிகள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ,60 கோடி செலவில் கேன்சர் கேர் யூனிட் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த கேன்சர் என்கிற புற்றுநோய் கடந்த காலத்தில் கொடிய நோயாக இருந்தாலும், இன்றைக்கு மனிதர்களை பாதிக்கக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். 

அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிகிச்சை பகுதியை திறந்து வைத்து பேசிய அவர், முதல்வர் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித் துறை சார்பில் விரைவில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில், மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்களுடைய திருவுருவச் சிலை அமைக்கப்படவிருக்கிறது. 

அப்துல் கலாம் அவர்களின் சாதனைகள் போல இந்தத் திட்டம் மக்களுக்கு பயன்பட்டு, புற்றுநோய் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாக்கக் கூடிய வகையில் தென்னிந்தியாவிலேயே ஒரு சிறப்பு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com