
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கரிக்கா தோப்பு எம்.கே.பி. நகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் தீன். இவர் எம். சாண்ட் விற்பனை செய்து வருகிறார். இவர் வீட்டில் புதன்கிழமை காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கோவையில் கார் வெடிப்பு வழக்கின் பின்னணியில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிதி உதவி வாங்கி கொடுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கிகளில் பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.